< Back
மாநில செய்திகள்
எலி தலை இருந்த புகார் எதிரொலி: ஆரணி சைவ ஓட்டலுக்கு சீல்..!
மாநில செய்திகள்

எலி தலை இருந்த புகார் எதிரொலி: ஆரணி சைவ ஓட்டலுக்கு சீல்..!

தினத்தந்தி
|
13 Sept 2022 11:49 PM IST

ஆரணியில் உள்ள சைவ ஓட்டல் ஒன்றில் உணவில் எலி தலை இருந்த புகாரின் எதிரொலியாக ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள சைவ ஓட்டல் ஒன்று செயல் பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த ஓட்டலில் வீட்டு விசேசத்திற்கு உணவு வாங்கி சென்றுள்ளனர். அப்போது வாடிக்கையாளர் ஒருவர் வாங்கி சென்ற உணவுப் பார்சலில் பீட்ரூட் பொரியலில் எலித்தலை இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று (செவ்வாய்கிழமை) இரவு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்பு த்துறை அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் குழுவினர் ஓட்டலுக்கு சீல் வைத்தனர். மறு உத்தரவு வரும் வரை ஓட்டலை திறக்கக்கூடாது என உணவுப் பாதுகாப்புத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்