< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
செல்லியம்மன் கோவிலுக்கு சொந்தமான 9 கடைகள் பூட்டி சீல் வைப்பு
|21 July 2022 11:35 PM IST
தர்மபுரியில் செல்லியம்மன் கோவிலுக்கு சொந்தமான 9 கடைகள் பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை செல்லியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் மற்றும் கடைகள் நேதாஜி பைபாஸ் ரோட்டில் உள்ளது. இந்த இடத்தில் சோலையப்பன் என்பவர் 9 கடைகள் கட்டி பல ஆண்டுகளாக பராமரித்து வந்தார். இந்த கடைகளுக்கு சில ஆண்டுகளாக முறையான வாடகை செலுத்தப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சாதகமான தீர்ப்பு வந்தது. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உதயகுமார் தலைமையில் ஆய்வாளர் சங்கர், கோவில் செயல் அலுவலர் சபரீஸ்வரி, தனி தாசில்தார் சேதுலிங்கம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் போலீசார் செல்லியம்மன் கோவிலுக்கு சொந்தமான அந்த 9 கடைகளுக்கு பூட்டி சீல் வைத்தனர்.