< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
2 மதுபான பார் சீல் வைப்பு
|23 May 2023 12:15 AM IST
2 மதுபான பார் சீல் வைக்கப்பட்டது
இளையான்குடி
அரசு மதுபான கடை அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர் சம்பந்தப்பட்டவர்களுக்கு லஞ்சம் கொடுத்து மது வாங்கி விற்பதாக கூறிய வீடியோ வலைத்தளங்களில் பரவியது. இந்த நிலையில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் பாஸ்கரன் தலைமையிலான வருவாய்த் துறையினர் மற்றும் போலீசாருடன் இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமத்தில் உள்ள 2 பார்களுக்கும் சீல் வைக்கப்பட்டது. சாலைக் கிராமம் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் அரசு மதுபான கடை பகுதிக்கு சென்ற போது மதுபானங்களை விற்றவர் தப்பி ஓட முயன்றார்..தெற்கு வலசை காடு பகுதியைச் சேர்ந்த ராஜா (வயது 47) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.அப்பொழுது திறந்த நிலையில் இருந்த பாட்டிலில் ஒருவித விஷ நெடி இருந்துள்ளது. சம்பவம் தொடர்பாக ராமச்சந்திரன் (60) என்பவரும் கைது செய்யப்பட்டு உள்ளார்.