< Back
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு `சீல்
விருதுநகர்
மாநில செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு `சீல்'

தினத்தந்தி
|
19 May 2022 11:41 PM IST

புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு `சீல்' வைக்கப்பட்டது.


காரியாபட்டி,

காரியாபட்டி அருகே உள்ள வில்லிபத்திரி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 51). இவர் பல சரக்கு கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று மல்லாங்கிணறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்து தலைமையிலான போலீசார் இவருடைய கடையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது மாரியப்பன் கடையில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து மாரியப்பனை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே புகையிலை பொருட்கள் விற்பனை செய்த மாரியப்பன் கடையை அருப்புக்கோட்டை உணவு பாதுகாப்புத்துறைஅலுவலர் காசிம் தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர்.


Related Tags :
மேலும் செய்திகள்