< Back
மாநில செய்திகள்
திருவெண்காட்டில் குடியிருப்புகளை கடல் நீர் சூழ்ந்தது.
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

திருவெண்காட்டில் குடியிருப்புகளை கடல் நீர் சூழ்ந்தது.

தினத்தந்தி
|
10 Dec 2022 12:15 AM IST

திருவெண்காட்டில் குடியிருப்புகளை கடல் நீர் சூழ்ந்தது.

திருவெண்காடு:

திருவெண்காடு அருகே உள்ள மடத்துக்குப்பம் கடற்கரையில் நேற்று அதிகாலை முதல் கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டது. ராட்சத அலைகள் எழுந்ததால் கடல்நீர் கிராமத்துக்குள் புகுந்தது. இதனால் குடியிருப்புகளை கடல்நீர் சூழ்ந்ததால், அந்த பகுதி மக்கள் அவதி அடைந்தனர்.இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:- மடத்துக்குப்பம் மீனவ கிராமத்தில் 500 மீனவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 200 பைபர் படகுகளைக் கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த சில ஆண்டுகளாக எங்கள் கிராமத்தில் கடல் அரிப்பு அதிகரித்து வருகிறது.. தற்போது மாண்டஸ் புயல் காரணமாக கடல் சீற்றமாக காணப்படுவதால் ஊருக்குள் கடல் நீர் புகுந்து விட்டது.இதே நிலை தொடர்ந்தால் மடத்துக்குப்பம் மீனவ கிராமத்தில் மீனவர்கள் வசிக்க முடியாத நிலை ஏற்படும். எனவே இதனை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் மடத்துக்குப்பம் கடற்கரையில் கருங்கல் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் என்றனர்.

---


மேலும் செய்திகள்