< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
|24 Feb 2024 11:39 AM IST
ரூ.1,802 கோடி மதிப்பீட்டில் 39 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
நெம்மேலி,
செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலை, நெம்மேலியில் ரூ.2,465 கோடி மதிப்பீட்டில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த ஆலையின் மூலம் சோழிங்கநல்லூர், வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளில் உள்ள 9 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள். தினமும் 15 கோடி லிட்டர் நீரை சுத்திகரிப்பு செய்யும் வகையில் இந்த ஆலை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் 95 முடிவுற்ற திட்டப் பணிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ரூ.1,802 கோடி மதிப்பீட்டில் 39 புதிய திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.