< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கடல் சீற்றம்.. நாகை மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை
|23 Aug 2024 11:43 AM IST
கடந்த இரு நாட்களாக கடலில் பலத்த சுறைக்காற்று வீசுவதுடன், கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவகிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடந்த ஒரு வார காலமாக மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் வலையில் வாவல், காலா, ஷீலா, திருக்கை, நண்டு இறால், உள்ளிட்ட அனைத்து வகையான மீன்களும் கிடைத்து வந்தன. மீன்களுக்கு நல்ல விலையும் கிடைத்து வந்தது. இதனால் அதிகப்படியான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வந்தனர்.
இந்த நிலையில் கடந்த இரு நாட்களாக கடலில் பலத்த சுறைக்காற்று வீசுவதுடன், கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த சுமார் 5,000 மீனவர்கள் இன்று 2-வது நாளாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. சுமார் 1000-த்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.