< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
குளச்சலில் 3-வது நாளாக கடல் சீற்றம் - மீன்பிடித் தொழில் பாதிப்பு...!
|4 July 2022 3:11 PM IST
குளச்சல் கடலில் சூறைக்காற்று காரணமாக கட்டுமர மீனவர்கள் தொடர்ந்து 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.
குளச்சல்,
குமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும்,1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்கள் மூலம் மீனவர்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குளச்சல் பகுதியில் கடந்த 3 நாட்களாக பலமான காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் கடலில் ராட்சத அலைகள் எழுந்து கடல் சீற்றமாக காணப்படுவதால் வள்ளம், கட்டுமர மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
இதனால் குளச்சலில் மீன்வரத்து குறைந்தது. இன்று காலை மழை சற்று ஓய்ந்து காணப்பட்டது. ஆனால் கடல் தொடர்ந்து சீற்றமாக காணப்படுவதால் தொடர்ந்து 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லாவில்லை. இதனால் இத்தொழிலை நம்பி உள்ள மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மீன்கள் கிடைக்காததால் மீன் பிரியர்கள் மற்றும் வியாபாரிகளும் ஏமாற்றடைத்துடன் திரும்பி சென்றனர்.