< Back
மாநில செய்திகள்
நடுக்கடலில் நாகை மாவட்ட மீனவர்கள் மீது கடல் கொள்ளையர்கள் தாக்குதல்
மாநில செய்திகள்

நடுக்கடலில் நாகை மாவட்ட மீனவர்கள் மீது கடல் கொள்ளையர்கள் தாக்குதல்

தினத்தந்தி
|
22 Aug 2023 4:54 AM IST

நடுக்கடலில் நாகை மாவட்ட 4 மீனவர்கள் மீது கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நாகப்பட்டினம்,

நாகப்பட்டினம் மாவட்டம் ஆறுகாட்டுதுறையில் இருந்து 4 மீனவர்கள் விசைப்படகில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். அப்போது நடுக்கடலில் நாகை மாவட்ட 4 மீனவர்கள் மீது கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும், மீனவர்களிடம் இருந்த திசைகாட்டு கருவி, செல்போன் பேட்டரி உள்ளிட்ட பொருட்களை அந்த கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளையர்கள் தாக்கியதால் காயமடைந்த 2 மீனவர்கள் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்