< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
கூட்டப்பனையில் கடல் அரிப்பு
|12 Oct 2023 2:19 AM IST
கூட்டப்பனையில் கடல் அரிப்பு காரணமாக மீன் விற்பனைக்கூடம் இடிந்து விழுந்தது.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் கூட்டப்பனை கடற்கரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடல் அரிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு அரசு சார்பில் மீனவர்களுக்கு கட்டிகொடுத்த பண்டகசாலை (மீன் விற்பனை கூடம்) சாய்ந்து நின்றது. இந்தநிலையில் நேற்று மாலை அந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. தகவல் அறிந்ததும் திசையன்விளை தாசில்தார் பத்மபிரியா, குட்டம் கிராம நிர்வாக அலுவலர் சாம்ராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர்.