< Back
மாநில செய்திகள்
எஸ்.டி.பி.ஐ. சார்பில் பக்தர்களுக்கு தர்பூசணி பழம்
தென்காசி
மாநில செய்திகள்

எஸ்.டி.பி.ஐ. சார்பில் பக்தர்களுக்கு தர்பூசணி பழம்

தினத்தந்தி
|
11 Aug 2022 9:42 PM IST

சங்கரன்கோவில் ஆடித்தபசு விழாவில் எஸ்.டி.பி.ஐ. சார்பில் பக்தர்களுக்கு தர்பூசணி பழம் வழங்கப்பட்டது.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் ஆடித்தபசு காட்சி விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது திருவேங்கடம் சாலையில் வைத்து சங்கரன்கோவில் நகர எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பக்தர்களுக்கு தர்பூசணி பழம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர துணைத்தலைவர் முருகன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சேக் முகமது முன்னிலை வகித்தார். அப்போது 2 ஆயிரம் பக்தர்களுக்கு தர்பூசணி பழம் வழங்கப்பட்டது. இதில் நகர பொருளாளர் பீர் மைதீன், இணை செயலாளர் நசீர், நகர செயற்குழு உறுப்பினர் நூர் முகமத், இப்னு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்