< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அரியானா வன்முறையை தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ. கட்சி வெளியிட்ட அறிவிப்பு - சென்னை என்.ஐ.ஏ. அலுவலகம் முன்பு குவிந்த போலீசார்
|5 Aug 2023 10:07 PM IST
என்.ஐ.ஏ. அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை,
அரியானா மாநிலத்தில் நிகழ்ந்த மசூதி எரிப்பு மற்றும் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை கண்டித்து சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் என்.ஐ.ஏ. அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி சென்னை என்.ஐ.ஏ. அலுவலகம் முன்பு 2 துணை காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 15 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.