< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
வியாபாரிக்கு அரிவாள் வெட்டு
|1 Oct 2023 3:30 AM IST
கன்னிவாடியில் வியாபாரியை அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
கன்னிவாடி மேற்கு தெருவை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 42). இதே ஊரை சேர்ந்தவர் மாரிமுத்து (42). இருவரும் வாழைக்காய் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரே வாழை தோட்டத்துக்கு இருவரும் சென்று வாழைக்காய்க்கு விலை பேசினர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அழகர்சாமி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாரிமுத்துவை சரமாரியாக வெட்டினார்.
இதில் அவருடைய தோள்பட்டை, நெற்றி ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கன்னிவாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிராஜ்தீன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அழகர்சாமியை கைது செய்தனர்.