< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
நாகர்கோவிலில்கொத்தனாருக்கு அரிவாள் வெட்டு2 பேர் கைது
|20 Feb 2023 3:11 AM IST
நாகர்கோவிலில்கொத்தனாருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது..
நாகர்கோவில்:
நாகர்கோவில் பள்ளிவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜன் (வயது 42), கொத்தனார். ராஜனுக்கும், ஒழுகினசேரி சோழராஜா கோவில் பகுதியை சேர்ந்த செல்வம் (28), மற்றும் வாத்தியார்விளை மிக்கேல்ராஜ் (21) இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்து வந்தது. சம்பவத்தன்று ராஜன் ஒழுகினசேரி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செல்வம், மிக்கேல்ராஜ் ஆகிய இருவரும் சேர்ந்து ராஜனை தாக்கி அரிவாளால் வெட்டினர். இதில் ராஜன் படுகாயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் செல்வம், மிக்கேல் ராஜ் ஆகியோரை வடசேரி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
---