< Back
மாநில செய்திகள்
ஆம்புலன்ஸ் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு
கரூர்
மாநில செய்திகள்

ஆம்புலன்ஸ் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு

தினத்தந்தி
|
14 July 2022 6:54 PM GMT

முன்விரோதம் காரணமாக ஆம்புலன்ஸ் உரிமையாளரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அரிவாள் வெட்டு

கரூர் திருக்காம்புலியூரை சேர்ந்தவர் தங்கபாண்டியன்(வயது 35). இவர் ஆம்புலன்ஸ் வைத்து ஓட்டி வருகிறார். இதேபோல் அரவக்குறிச்சி அருகே உள்ள ராஜபுரத்தை சேர்ந்தவர் முரளி. இவரும் ஆம்புலன்ஸ் வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில் தங்கபாண்டியனுக்கும், ஒரு பெண்ணிற்கும் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் முரளிக்கும், தங்க பாண்டியனுக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதமாக மாறியதாக தெரிகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று தங்கபாண்டியன் ஆட்டையம்பரப்பு அருகே உள்ள ஒரு ஓட்டலின் அருகே நின்று கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த முரளி மற்றும் ராயனூர் முகாமைச் சேர்ந்த வேன் டிரைவர் கமல் ஆகிய இருவரும் ஒன்று சேர்ந்து தங்கபாண்டியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த முரளி தான் வைத்திருந்த அரிவாளை எடுத்து தங்கபாண்டியனை வெட்டியுள்ளார். மேலும் கமல் இரும்பு கம்பியால் தங்கபாண்டியனை தாக்கியுள்ளார்.

தப்பியோட்டம்

இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் ஓடி வரவே அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். பின்னர் படுகாயம் அடைந்த தங்கபாண்டியனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தங்கபாண்டியனின் மனைவி அழகேஸ்வரி(30) தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முரளி மற்றும் கமல் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்