< Back
மாநில செய்திகள்
ரேஷன் கடை ஊழியருக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

ரேஷன் கடை ஊழியருக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது

தினத்தந்தி
|
6 Oct 2023 12:15 AM IST

ரேஷன் கடை ஊழியரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசர் கைது செய்தனர்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே காட்டுப்பையூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் மணிகண்டன் (வயது 36). இவர் வடமலையனூர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், ஏரவளம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை பார்க்கும் கேசவன் மகன் அர்ஜூனன் (38) என்பவருடன் ஆவி கொளப்பாக்கம் கிராமத்தில் உள்ள புறவழிச்சாலையில் இருக்கும் பாலத்தின் மீது அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வீரட்டகரம் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் மகன் கார்த்திகேயன் (23) என்பவர் மணிகண்டனிடம் வீண் தகராறில் ஈடுபட்டதுடன், அவரது மோட்டார் சைக்கிளையும் உடைத்து சேதப்படுத்தியதாக தொிகிறது. மேலும் இதை தட்டிக்கேட்ட அர்ஜூனன் தலையில் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் கார்த்திகேயன் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்