< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
கொத்தனாருக்கு அரிவாள் வெட்டு
|27 Sept 2023 12:15 AM IST
இரணியல் அருகே கொத்தனாருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
திங்கள்சந்தை:
இரணியல் அருகே கொத்தனாருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது
இரணியல் அருகே உள்ள மல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் நெல்லை மணி (வயது 53), கொத்தனார். இவரது தோட்டத்தில் உள்ள பாக்கு மரத்தில் சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்ற அர்னால்ட் பாக்கு பறித்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று இரவு குமார் வீட்டுக்கு சென்ற நெல்லை மணி பாக்கு பறித்தது தொடர்பாக கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த குமார் நீ எப்படி இங்கு வரலாம் என அவதூறாக பேசி, கையில் வைத்திருந்த அரிவாளால் நெல்லை மணியை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் நெல்லை மணிக்கு கையில் படுகாயம் ஏற்பட்டது. அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து நெல்லை மணி இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.