< Back
மாநில செய்திகள்
3 பேருக்கு அரிவாள் வெட்டு
திண்டுக்கல்
மாநில செய்திகள்

3 பேருக்கு அரிவாள் வெட்டு

தினத்தந்தி
|
5 Sept 2023 3:30 AM IST

வடமதுரை அருகே 3 பேரை அரிவாளால் வெட்டிய நபர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

வடமதுரை அருகே உள்ள தாமரைப்பாடி நாகம்பட்டியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 35), கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (24). நேற்று முன்தினம் இவர், பால்ராஜின் உறவினரான பெண் ஒருவரிடம் பேசி கொண்டிருந்தார். இதுகுறித்து பால்ராஜ் மற்றும் அவரது உறவினர்கள் கருப்பசாமியிடம் கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த கருப்பசாமி, பால்ராஜ் மற்றும் அவரது உறவினர்களான வெங்கடேஷ்குமார் (22), மற்றொரு கருப்பசாமி (24) ஆகியோரை அரிவாளால் வெட்டினார். பின்னர் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பி ஓடினார். இதில் காயமடைந்த 3 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து பால்ராஜ் அளித்த புகாரின்பேரில், வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கருப்பசாமியை தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்