< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
வியாசர்பாடியில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு; ரவுடி கைது
|9 Nov 2022 9:00 AM IST
வியாசர்பாடியில் 2 பேரை அரிவாளால் வெட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வியாசர்பாடி நேரு நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் அமுல்ராஜ். இவரது மகன் அஜய் (வயது 19). இவர் மீது வியாசர்பாடி, எம்.கே.பி.நகர் போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 41-வது பிளாக்கை சேர்ந்த இனியவன் (41) என்பவரை கத்தியால் பலமாக வெட்டி உள்ளார். இதனால் வெட்டு காயத்துடன் ரத்த வெள்ளத்தில் இருந்த இனியவனை அப்பகுதி மக்கள் மீட்டு, சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் வியாசர்பாடி சாமந்திப்பூ காலனியைச் சேர்ந்த அஜித் (25) என்பவரையும் அஜய் கத்தியால் பலமாக வெட்டி உள்ளார். இந்த 2 சம்பவங்கள் குறித்து வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பதுங்கி இருந்த அஜய்யை கைது செய்தனர்.