< Back
மாநில செய்திகள்
தொழிலாளிக்கு கத்திக்குத்து
தேனி
மாநில செய்திகள்

தொழிலாளிக்கு கத்திக்குத்து

தினத்தந்தி
|
20 Jun 2022 10:40 PM IST

அல்லிநகரத்தில் தொழிலாளியை கத்தியால் குத்தியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

அல்லிநகரம் அண்ணா நகர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பாண்டியன், அழகர்சாமி காலனியை சேர்ந்தவர் முருகன். கூலித்தொழிலாளர்கள். உறவினர்களான இவர்கள் இருவரும் பேசி கொண்டிருந்தனர். அப்போது பாண்டியனிடம் முருகன் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பாண்டியன் பணம் கொடுக்க மறுத்துவிட்டார்.

இதனால் முருகன் அருகில் இருந்த டீ குடிக்கும் டம்ளரால் பாண்டியனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாண்டியன், அவரது மகன் அஜீத் மற்றும் ரமேஷ் ஆகியோர் சேர்ந்து முருகனை கத்தியால் குத்தினர். இதையடுத்து படுகாயமடைந்த இருவரும் தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் பாண்டியன் கொடுத்த புகாரின்பேரில் முருகன் மீதும், முருகன் கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் உள்பட 3 பேர் மீதும் அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்