< Back
மாநில செய்திகள்
சாரணர் இயக்கம், செஞ்சிலுவை சங்கம் தொடங்க வேண்டும்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

சாரணர் இயக்கம், செஞ்சிலுவை சங்கம் தொடங்க வேண்டும்

தினத்தந்தி
|
20 Oct 2023 12:15 AM IST

மாவட்ட மெட்ரிக் பள்ளிகளில் சாரணர் இயக்கம், செஞ்சிலுவை சங்கம் தொடங்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் வலியுறுத்தினார்.

மயிலாடுதுறை மாவட்ட மெட்ரிக் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர்களுக்கான கூட்டம் மயிலாடுதுறையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அம்பிகாபதி தலைமை தாங்கினார். இதில் மயிலாடுதுறை தனியார் பள்ளிகள் மாவட்டக் கல்வி அலுவலர் நிர்மலாராணி, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முத்துக்கணியன், பாரத சாரண, சாரணியர் செயலர்கள் காசி.இளங்கோவன், செழியன் இளம் செஞ்சிலுவைச் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீரராகவன், தேசிய பசுமைப் படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். கூட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் பாரத சாரண, சாரணியர் இளம் செஞ்சிலுவைச் சங்கம், தேசிய பசுமைப் படை ஆகியவை தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.மேலும் மழைக்காலத்தில் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் பள்ளி வாகனம், மற்றும் பள்ளிக் கட்டிடத்தை பராமரித்திட வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி தாளாளர்கள் மற்றும் முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்