< Back
மாநில செய்திகள்
கொளுத்தும் வெயில்.. சென்னை பேருந்துகளில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி
மாநில செய்திகள்

கொளுத்தும் வெயில்.. சென்னை பேருந்துகளில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி

தினத்தந்தி
|
12 May 2024 2:38 PM IST

பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெப்ப அலை வீசுகிறது. வெயிலுக்கு மத்தியில் சாலைகளில் வாகனங்களை இயக்குவது கடும் சவாலாக உள்ளது.

இந்த நிலையில், வெயில் பாதிப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஓட்டுநரின் இருக்கையின் அருகே பேட்டரியால் இயங்கும் மின்விசிறி அமைக்கப்பட உள்ளது.

முதற்கட்டமாக 1,000 பேருந்துகளின் ஓட்டுநர் இருக்கைகளில் பேட்டரி மின்விசிறி பொறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. சென்னையில் தற்போது 250 பேருந்துகளில் ஓட்டுநர் இருக்கையில் மின்விசிறி பொருத்தப்பட்டுள்ளது என்றும் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்