தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்.. வேலூரில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு
|தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சென்னை,
தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக சாலை ஓரத்தில் உள்ள கடைகளில் பழச்சாறுகள், தர்பூசணி பழ வகைகள், கரும்பு சாறு, இளநீர் போன்றவற்றை பருகி இளப்பாறி வருகின்றனர்.
சாலையில் நடந்து செல்லும் இளைஞர்கள், பெரியவர்கள் குடைப்பிடித்த படியும், பெண்கள் தலையில் ஷால் மற்றும் புடவைகளை போர்த்திய படி செல்கின்றனர். வருங்காலங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பொதுமக்கள் காரணம் இன்றி வெளியில் செல்லாமல் இருக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக வேலூரில் 107 டிகிரி வெயில் சுட்டெரித்தது. மேலும், திருச்சி, திருப்பத்தூர், தஞ்சாவூர், சேலம், பாளையங்கோட்டை, நாமக்கல், மதுரை விமான நிலையம், மதுரை நகரம், கரூர், ஈரோடு, தரும்மபுரி, சென்னை ஆகிய பகுதிகளிலும் வெப்பம் 100 டிகிரி செல்சியசை தாண்டி வெப்பம் பதிவானது.