< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் 18 இடங்களில் வெயில் சதம்; ஈரோட்டில் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பம்
மாநில செய்திகள்

தமிழகத்தில் 18 இடங்களில் வெயில் சதம்; ஈரோட்டில் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பம்

தினத்தந்தி
|
3 May 2024 9:39 PM IST

தமிழகத்தில் இன்று 18 இடங்களில் வெயில் சதமடித்தது. சென்னை(நுங்கம்பாக்கம்) - 100.5 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கோடை மழை பெய்யாததால் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று 18 இடங்களில் வெயில் சதமடித்தது. அதன் விவரம் வருமாறு:-

ஈரோடு - 110.1 டிகிரி

திருத்தணி - 108.5 டிகிரி

வேலூர் - 108.5 டிகிரி

கரூர் - 108.5 டிகிரி

திருப்பத்தூர் - 107.6 டிகிரி

மதுரை - 106.1 டிகிரி

திருச்சி - 105.2 டிகிரி

சேலம் - 104.9 டிகிரி

சென்னை (மீனம்பாக்கம்) - 104.3 டிகிரி

தர்மபுரி - 104.3 டிகிரி

பாளையங்கோட்டை - 104.3 டிகிரி

மதுரை விமான நிலையம் - 104.1 டிகிரி

நாமக்கல் - 104 டிகிரி

கோவை - 102.2 டிகிரி

தஞ்சாவூர் - 102.2 டிகிரி

கடலூர் - 101.8 டிகிரி

நாகப்பட்டினம் - 101.4 டிகிரி

சென்னை(நுங்கம்பாக்கம்) - 100.5 டிகிரி

மேலும் செய்திகள்