< Back
மாநில செய்திகள்
தீப்பிடித்து எரிந்த ஸ்கூட்டர்கடலூரில் பரபரப்பு
கடலூர்
மாநில செய்திகள்

தீப்பிடித்து எரிந்த ஸ்கூட்டர்கடலூரில் பரபரப்பு

தினத்தந்தி
|
24 Dec 2022 12:15 AM IST

கடலூரில் தீப்பிடித்து எரிந்த ஸ்கூட்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் லாரன்ஸ். இவர் நேற்று தனது ஸ்கூட்டரில் பெட்ரோல் நிரப்பி விட்டு பீச் ரோட்டில் உள்ள ஒரு கடை முன்பு நிறுத்திவிட்டு உள்ளே சென்று விட்டார்.

இந்த நிலையில் திடீரென அந்த ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். பெட்ரோல் டேங்கில் ஏற்பட்ட கசிவு காரணமாகவும், நீண்ட நேரமாக வெயிலில் நிறுத்தி இருந்ததாலும் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்