< Back
மாநில செய்திகள்
விவசாயிகளுடன் அறிவியல் விஞ்ஞானிகள் கலந்துரையாடல்
கரூர்
மாநில செய்திகள்

விவசாயிகளுடன் அறிவியல் விஞ்ஞானிகள் கலந்துரையாடல்

தினத்தந்தி
|
6 Jun 2022 11:56 PM IST

விவசாயிகளுடன் அறிவியல் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நடந்தது.

தோகைமலை,

தோகைமலை அருகே உள்ள புழுதேரி இந்திய வேளாண் அறிவியல் கழக வேளாண்மை அறிவியல் மையம் சார்பாக விவசாயிகளுடன் அறிவியல் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கரூர் மாவட்ட வேளாண் துணை இயக்குனர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். தொழில்நுட்ப வல்லுனர் தமிழ்ச்செல்வி வரவேற்று பேசினார். ஆர்டி மலை ஒன்றிய கவுன்சிலர் சின்னையன், தலைவர் பொன்னம்மாள் பாலமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி விவசாயிகள் கடலை, எள்ளு சாகுபடியில் எப்படி ஈடுபடுவது என்பன உள்பட பல்வேறு வகையான கருத்துகள் எடுத்துரைப்பட்டன. தொடர்ந்து விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விஞ்ஞானிகள் பதில் அளித்து நிவர்த்தி செய்தனர். தொடர்ந்து பிரதம மந்திரி உழவர் கவுரவ நிதி விவசாயிகளுக்கு எவ்வாறு பரிமாற்றம் செய்யப்பட்டது என்று காணொலிக்காட்சி மூலம் காண்பிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட 850 விவசாயிகளுக்கும் தென்னங்கன்று, காய்கறி விதைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்