திருநெல்வேலி
பள்ளியில் அறிவியல் கண்காட்சி
|திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
திசையன்விளை:
திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்றனர். இதில் வகுப்பு வாரியாக மாணவர்கள் தங்களது தனித்திறனுடன் கூடிய அறிவியல் படைப்புகளை உருவாக்கி இருந்தனர். மேலும் மாணவர்கள் அதன் செயல்பாடு குறித்தும் செய்முறை விளக்கம் அளித்தனர். இதில் நல்ல முறையில் அறிவியல் படைப்புகளை உருவாக்கி செய்முறை விளக்கம் அளித்தவர்களை வகுப்புக்கு மூவராக தேர்ந்தெடுத்து அவர்களின் படைப்புகளை மாணவர்களின் பார்வைக்கு வைத்தனர். இக்கண்காட்சியை பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், இயக்குனர் சவுமியா ஜெகதீஷ், முதல்வர் எலிசபெத் மற்றும் அனைத்து ஆசிரியர்களும், மாணவ-மாணவிகளும் கண்டுகளித்தனர். இக்கண்காட்சியில் சிறப்பான படைப்புகளை உருவாக்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.