< Back
மாநில செய்திகள்
மழலையர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

மழலையர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

தினத்தந்தி
|
20 Oct 2023 12:15 AM IST

வலிவலம் மாணிக்க விநாயகர் மழலையர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

வாய்மேடு:

நாகை அருகே வலிவலம் மாணிக்க விநாயகர் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியின் 10-ம் ஆண்டு அறிவியல் கண்காட்சி நடந்தது. கண்காட்சியை உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவில் நிர்வாகி மலர்மணி தொடங்கி வைத்தார். அவருக்கு பள்ளியின் சார்பாக சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பொதுமக்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளின் அறிவியல் கண்காட்சிகளை கண்டுகளித்தனர். இதில் பள்ளி மாணவர்களுக்கு உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவில் நிர்வாகி மலர்மணி பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்