< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
ராயல் மழலையர்-தொடக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி
|24 Oct 2023 11:45 PM IST
கொத்தமங்கலத்தில் ராயல் மழலையர்-தொடக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
கொத்தமங்கலத்தில் உள்ள ராயல் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இப்பள்ளியில் பயின்று வரும் மாணவ-மாணவிகள் சந்திரயான்-3 மற்றும் காற்றாலையில் இருந்து மின் உற்பத்தி, மனித உடல் உறுப்பு மாதிரி செய்முறை உள்ளிட்ட பல்வேறு வகைகளில் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தியதோடு தங்களது படைப்புகளுக்கு செய்முறை விளக்கமும் அளித்தனர். தொடர்ந்து நேற்று விஜயதசமியை முன்னிட்டு மாணவ- மாணவிகளின் சேர்க்கையும் நடைபெற்றன. இதில் பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர், பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.