< Back
மாநில செய்திகள்
பள்ளியில் அறிவியல் கண்காட்சி
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

தினத்தந்தி
|
10 Sept 2023 3:36 PM IST

மண்ணிவாக்கம் ஸ்ரீ நடேசன் வித்யாசாலா பள்ளி சார்பில் அறிவியல் மற்றும் கலை கண்காட்சி பள்ளியில் நடைபெற்றது.

தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் ஸ்ரீ நடேசன் வித்யாசாலா பள்ளி சார்பில் ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகள் என்ற கருப்பொருளில், அறிவியல் மற்றும் கலை கண்காட்சி பள்ளியில் நடைபெற்றது. அறிவியல் கண்காட்சியை மெட்ரிக் பள்ளிகளின் முன்னாள் இயக்குநர், மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் உறுப்பினர் நாராயணசுவாமி தொடங்கி வைத்து பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பாராட்டினார். முன்னதாக அனைவரையும் ஸ்ரீ நடேசன் பள்ளி நிறுவனர் டாக்டர் ராமசுப்பிரமணியன் வரவேற்று பேசினார். அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் புள்ளி விவர தரவுகளுடன் விளக்கினார்கள். முன்னதாக, ஐ.நா.வின் நிலைத்தன்மை இலக்குகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளியின் சார்பில் மனித சங்கிலி பேரணி நடத்தப்பட்டது. பேரணியை ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தொடங்கி வைத்தார். இதில் பள்ளி முதல்வர் காயத்ரி ராமச்சந்திரன், பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்