< Back
மாநில செய்திகள்
அறிவியல் கண்காட்சி
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

அறிவியல் கண்காட்சி

தினத்தந்தி
|
1 March 2023 12:15 AM IST

அத்தியூர் லிட்டில் பிளவர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

ரிஷிவந்தியம்

தேசிய அறிவியல் தினத்தை யொட்டி ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குட்பட்ட அத்தியூர் கிராமத்தில் இயங்கி வரும் லிட்டில் பிளவர் மழலையர் தொடக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதை அறக்கட்டளை குழு நிறுவனர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார், பள்ளி தாளாளர் திருமுருகன் முன்னிலை வகித்தார். முதல்வர் மாயக்கண்ணன் வரவேற்றார். அறிவியல் கண்காட்சியில் 200 மாணவர்கள் பல்வேறு தலைப்புகளில் உருவாக்கிய படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர். இதை பெற்றோர், பொதுமக்கள் பார்வையிட்டு சிறந்த படைப்புகளை உருவாக்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சசிகலா, மாதேஸ்வரி, கலைச்செல்வி, சுகுணா, ஜீவிதா, புஷ்பரதி, சத்யா, லட்சுமி, குங்குமம், ஐஸ்வர்யா மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்