திருநெல்வேலி
அறிவியல் கண்காட்சி
|நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
வள்ளியூர் (தெற்கு):
தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியல் முதுகலை வேதியியல் துறை சார்பாக அறிவியல் கண்காட்சி போட்டி 'இளம் விஞ்ஞானி' என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு முதல்வர் ராஜன் தலைமை தாங்கி, அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் அன்றாட வாழ்வில் அவற்றின் பயன்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். அறிவியல் கண்காட்சிக்கு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து அறிவியல் மாதிரி வடிவம் கொண்டு வரப்பட்டு அங்கு பின்பற்றப்படும் மேம்பட்ட தொழில்நுட்பம் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. இந்த கண்காட்சியில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்களது அறிவியல் மாதிரிகளை காட்சிப்படுத்தினர். சிறந்த அறிவியல் மாதிரிகளுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் அறிவுறுத்தலின்படி முதுகலை வேதியியல் துறை பேராசிரியர்கள் லூர்து புஷ்பராஜ், கார்த்திகேயன், குளோரி புனிதா மற்றும் மாணவ-மாணவிகள் செய்திருந்தனர்.