சென்னையில் நாளை மறுநாள் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் - முதன்மை கல்வி அலுவலர்
|சென்னை மாவட்டத்தில் வரும் 3-ந் தேதி (சனிக்கிழமை) அன்று பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் வரும் 3-ந் தேதி (சனிக்கிழமை) அன்று வழக்கம் போல் செயல்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். தொடர் மழையால் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறாது. 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தொடர் பெருமழையின் காரணமாக சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்பணி நாட்களை ஈடு செய்திடும் வகையில் 03.12.2022 அன்று (சனிக்கிழமை) சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் திங்கள்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.