< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழகத்தில் காலாண்டு விடுமுறைக்கு பிறகு நாளை பள்ளிகள் திறப்பு
|9 Oct 2022 2:17 PM IST
தமிழகத்தில் காலாண்டு விடுமுறைக்கு பிறகு நாளை பள்ளிகள் திறக்கப்படுகிறது.
சென்னை,
தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு கடந்த மாதம் நடந்தது. தேர்வு முடிந்து 1-ந்தேதி முதல் விடுமுறை விடப்பட்டது. 9 நாட்கள் விடுமுறைக்கு பிறகு நாளை (திங்கள்) பள்ளிகள் திறக்கப்படுகிறது.
அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நாளை திறக்கப்படுகிறது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை வகுப்புகள் தொடங்கும். தொடக்கப் பள்ளிகளான 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் வருகிற 13-ந் தேதி (வியாழன்) திறக்கப்படுகிறது.