< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
|4 Aug 2022 9:32 PM IST
கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வால்பாறை,
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது அதிதீவிரமடைந்துள்ளது. தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நாளை நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழைக்கும் கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த 10 நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் வால்பாறை தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.