< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு
மாநில செய்திகள்

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு

தினத்தந்தி
|
9 Oct 2023 7:19 AM IST

1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை முடிவடைந்து, பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது.

சென்னை,

தமிழக அரசின் பாடத்திட்டத்தில் படிக்கும் அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை பல்வேறு கட்டங்களாக விடப்பட்டது. கடந்த 23-ந்தேதி ஒரு சில பள்ளிகளுக்கு விடப்பட்டன. 27-ந்தேதி முதல் மேலும் சில பள்ளிகள் மூடப்பட்டன.

மிலாடி நபி, காந்தி ஜெயந்தி விடுமுறையை மையமாக வைத்து காலாண்டு விடுமுறை விடப்பட்டது. தனியார் பள்ளி மாணவர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை கிடைத்தது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டன

இந்த நிலையில், காலாண்டு விடுமுறை முடிவடைந்து, 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது. காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படும் நிலையில், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. மாணவர்களுக்கான பாடத்திட்டம், மாணவர்கள் இடைநிற்றல் உள்ளிட்டவை குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது.

6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு கடந்த 3-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்