< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
கொரட்டூரில் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவி சாவு - விடுமுறையில் பாட்டி வீட்டுக்கு வந்தபோது சோகம்
|5 March 2023 2:15 PM IST
கொரட்டூரில் மாநகராட்சி குளத்தில் மூழ்கி கேரளாவை சேர்ந்த பள்ளி மாணவி பலியானார். விடுமுறையில் பாட்டி வீட்டுக்கு வந்தபோது இந்த சோகம் நிகழ்ந்துவிட்டது.
கேரளா மாநிலம் ஆலப்புழா, செம்பகுளம், நடுபாகம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 35). இவர்களுடைய மகன் மித்திரன்.
இந்த தம்பதிக்கு கீர்த்தனா (13) என்ற மகளும் இருந்தார். கீர்த்தனா கேரளாவில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். வருகிற 13-ந் தேதி இறுதி ஆண்டு தேர்வு நடக்க உள்ளதால் தற்போது பள்ளி விடுமுறை விடப்பட்டு உள்ளது.
இதனால் கீர்த்தனா கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தனது தாயுடன் சென்னை அண்ணாநகர் மேற்கு, பாடிகுப்பம் சாலை, காமராஜர் நகரில் உள்ள பாட்டி வீட்டுக்கு வந்திருந்தார்.
நேற்று காலை உறவுக்கார வாலிபர் சதீஷ்குமார் (27) மற்றும் ஆகாஷ் (13) ஆகியோருடன் கொரட்டூர் அருேக கலெக்டர் நகரில் உ