< Back
மாநில செய்திகள்
ஓசூரில்தனியார் பள்ளி வேன், மின் கம்பத்தில் மோதியது
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

ஓசூரில்தனியார் பள்ளி வேன், மின் கம்பத்தில் மோதியது

தினத்தந்தி
|
18 Oct 2023 10:39 PM IST

ஓசூரில் தனியார் பள்ளி வேன், மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

ஓசூர்

ஓசூர் பாகலூர் ஹவுசிங் போர்டு பகுதியில் பள்ளி மாணவர்களை வீடுகளில் இறக்கி விட்டு நேற்று முன்தினம் தனியார் பள்ளி வேன் ஒன்று சென்றது. இந்த வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதனால் மின் கம்பம் உடைந்து கம்பிகள் அறுந்து விழுந்தன. இதன் காரணமாக அந்த பகுதி இருளில் மூழ்கியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மின்வாரிய அதிகாரிகள் விரைந்து சென்று மின் இணைப்பை துண்டித்தனர். வேனில் மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஓசூரில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் மாணவ, மாணவிகளை அழைத்து செல்ல பயன்படுத்தும் வேன் மற்றும் பஸ்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிக வேகமாக செல்கின்றன. இதனால் மாணவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனியார் பள்ளி வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்