< Back
மாநில செய்திகள்
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் பள்ளி ஆசிரியை வெட்டிக்கொலை -கணவர் வெறிச்செயல்
மாநில செய்திகள்

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் பள்ளி ஆசிரியை வெட்டிக்கொலை -கணவர் வெறிச்செயல்

தினத்தந்தி
|
4 Jan 2023 2:53 AM IST

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் பள்ளி ஆசிரியை வெட்டிக்கொலை கணவர் வெறிச்செயல்.

நாமக்கல்,

நாமக்கல் அருகே உள்ள தூசூர் சம்பாமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது42), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பிரமிளா (36). காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு 16 வயதில் மகளும், 15 வயதில் மகனும் உள்ளனர்.

பிரமிளா அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். ராஜாவுக்கு மதுகுடிக்கும் பழக்கம் உண்டு. மேலும் அவருக்கு பிரமிளாவின் நடத்தையிலும் சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் தூங்கி விட்டனர். அதிகாலை 4 மணியளவில் எழுந்த ராஜா, மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளார்.

இதில் தலையில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த பிரமிளா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் சம்பவத்தை கூறி நாமக்கல் போலீசில் ராஜா சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்