< Back
மாநில செய்திகள்
தர்மபுரியில் பரபரப்பு: 8-ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்ற பள்ளி ஆசிரியர் கைது...!
தர்மபுரி
மாநில செய்திகள்

தர்மபுரியில் பரபரப்பு: 8-ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்ற பள்ளி ஆசிரியர் கைது...!

தினத்தந்தி
|
26 May 2022 4:48 PM IST

தர்மபுரியில் 8-ம் வகுப்பு மாணவியை ஆசிரியர் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தர்மபுரி அருகே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் 8-ம் வகுப்பு மாணவியை, கடந்த சில நாட்களுக்கு முன் அதே பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் ஒருவர் கடத்தி சென்றார். இதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மொரப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து 13 வயதுடைய 8-ஆம் வகுப்பு மாணவியை கிருஷ்ணகிரி மாவட்டம் புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமணமான முபாரக் என்கின்ற ஆங்கில ஆசிரியர் இரு சக்கர வாகனத்தில் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றது தெரியவந்தது. இந்த நிலையில் போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து அரூர், சேலம் அயோத்தியபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணித்து தேடி வந்தனர்.

அப்போது அயோத்தியபட்டினம் பகுதியில் இருந்த ஆங்கில ஆசிரியர் முபாரக்கை மொரப்பூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை மொரப்பூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் படிக்கும் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினிக்கு பரிந்துரை செய்து உள்ளார்.

பள்ளி மாணவியை ஆசிரியர் கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்