< Back
மாநில செய்திகள்
குளித்தலை பஸ் நிலையத்தில் மோதிக்கொண்ட பள்ளி மாணவர்கள்
கரூர்
மாநில செய்திகள்

குளித்தலை பஸ் நிலையத்தில் மோதிக்கொண்ட பள்ளி மாணவர்கள்

தினத்தந்தி
|
19 July 2023 12:06 AM IST

குளித்தலை பஸ் நிலையத்தில் பள்ளி மாணவர்கள் மோதிக்கொண்ட விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தகராறு

குளித்தலை பகுதியில் உள்ள அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் குளித்தலை அருகே உள்ள அரசு, தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக பஸ்சில் பயணிக்கும் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் குளித்தலையை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து குளித்தலை நகரப்பகுதிக்கு பஸ்சில் தினசரி பயணம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ் நிலையத்தில் அதிக கூட்டம் இருக்கும்.அதுபோல் நேற்று மாலை பஸ் நிலையத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பள்ளி மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

போலீசார் விசாரணை

மாணவர்களுக்கு ஆதரவாக சில இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக மாணவர்கள் ஒருவரை ஒருவர் திட்டி தாக்கி கொண்டிருந்துள்ளனர். பஸ் நிலையத்தில் மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தை அறிந்த போக்குவரத்து போலீசார் மற்றும் குளித்தலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் தகராறில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

பஸ் நிலையத்தில் பள்ளி மாணவர்கள் மோதிக்கொண்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்