< Back
மாநில செய்திகள்
பரமக்குடியில் சத்துணவு முட்டை சாப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்...!
மாநில செய்திகள்

பரமக்குடியில் சத்துணவு முட்டை சாப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்...!

தினத்தந்தி
|
3 Feb 2023 4:58 PM IST

பரமக்குடியில் சத்துணவு முட்டை சாப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சிவானந்தபுரத்தில் நகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் 240 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். அதில் 128 மாணவர்கள் தினமும் மதியம் சத்துணவு சாப்பிடுவது வழக்கம்.

அதைத் தொடர்ந்து இன்று மதியம் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களில் 12 பேருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு வாந்தி, மயக்கம் வந்து அவதிப் பட்டுள்ளனர். உடனே 12 மாணவ-மாணவிகளையும் ஆட்டோ மூலம் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், மாணவர்கள் சாப்பிட்ட முட்டை சரியாக வேகாமல் இருந்ததால் இந்த வாந்தி மயக்கம், வயிற்று வலி ஏற்பட்டு இருக்கலாம் என கூறினர்.

இந்த சம்பவம் பரமக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்