< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
பள்ளி மாணவர்கள் மோதலால் பரபரப்பு
|12 Oct 2023 2:57 AM IST
பாளையங்கோட்டையில் பள்ளி மாணவர்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் மாணவர்கள் இருதரப்பினர் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மோதலில் ஈடுபட்ட மாணவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்களையும் வரவழைத்து விசாரித்தனர். பின்னர் மாணவர்களிடம் இதுபோன்ற சம்பவங்களில் இனிமேல் ஈடுபட மாட்டோம் என்று எழுதி வாங்கிக்கொண்டு அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.