< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
300 மரக்கன்றுகள் நட்ட பள்ளி மாணவர்கள்
|18 Dec 2022 12:35 AM IST
பள்ளி மாணவர்கள் 300 மரக்கன்றுகள் நட்டனர்.
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, மங்களமேட்டை அடுத்துள்ள தனியார் பள்ளி மாணவர்கள் சமூக சேவை திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. பள்ளியின் பாட இணை செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, பொதுமக்களிடையே இயற்கையை காக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், காடுகளின் அவசியம் குறித்தும், மரம் வளர்த்தலின் முக்கியத்துவம் குறித்தும் ஊர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பள்ளி மாணவர்கள் சார்பில் பெருமத்தூர் கிராமத்தில் சாலையோரங்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.