< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நெல்லையில் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை - 2 ஆசிரியர்கள் கைது
|12 Sept 2024 8:36 PM IST
பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 ஆசிரியர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
நெல்லை,
நெல்லை பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இந்த விசாரணையில் தற்காலிக ஆசிரியர் ராபர்ட் மற்றும் நிரந்தர ஆசிரியர் நெல்சன் ஆகியோர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து நெல்சன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் ராபர்ட் பணி நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து இரு ஆசிரியர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.