< Back
மாநில செய்திகள்
பள்ளி மாணவர்கள் மோதல்; 5 பேர் படுகாயம்
கடலூர்
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்கள் மோதல்; 5 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
30 Aug 2022 12:15 AM IST

புதுப்பேட்டை அருகே பள்ளி மாணவர்கள் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

புதுப்பேட்டை,

பண்ருட்டி அருகே உள்ள அக்கடவல்லி பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஏராளமானோர் திருத்துறையூர், புதுப்பேட்டை, பண்ருட்டி, கடலூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்காக மாணவர்கள் அக்கடவல்லி பஸ் நிலையத்தில், பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது இருசமூகத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களிடையே ஏற்கனவே இருந்த முன்விரோதம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் திடீரென ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

இந்த மோதலில் ஒரு தரப்பை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே காயமடைந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், 5 பேரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், இந்த மோதல் தொடர்பாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மற்றொரு சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிந்து ஒரு மாணவனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்