< Back
மாநில செய்திகள்
ரெயில் மோதி பள்ளி மாணவர் பலி
திருச்சி
மாநில செய்திகள்

ரெயில் மோதி பள்ளி மாணவர் பலி

தினத்தந்தி
|
17 April 2023 1:13 AM IST

ரெயில் மோதி பள்ளி மாணவர் உயிரிழந்தார்.

கொள்ளிடம்டோல்கேட்:

ரெயில் மோதியது

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள கூத்தூர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகன் நித்தீஷ்குமார் (வயது 14). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை என்பதால் நித்தீஷ்குமார் தனது நண்பர்களுடன் பிச்சாண்டார்கோவில் ரெயில் நிலையம் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். தண்டவாளம் அருகே விளையாடியபோது அந்த வழியாக வந்த சென்னை நோக்கி சென்ற ரெயில், நித்தீஷ்குமார் மீது மோதியது.

சாவு

இதில் நித்தீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நித்தீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்