< Back
மாநில செய்திகள்
நீலகிரி
மாநில செய்திகள்
கார் மோதி பள்ளி மாணவர் படுகாயம்
|16 Oct 2023 3:15 AM IST
நாடுகாணி அருகே கார் மோதி பள்ளி மாணவர் படுகாயம் அடைந்தார்.
கூடலூர் தாலுகா மரப்பாலம் அருகே அட்டிக்கொல்லியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகன் கபிலன் (வயது 15). பள்ளி மாணவர். இந்தநிலையில் நேற்று அவர் வீட்டில் இருந்து நாடுகாணிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது கேரள பதிவு எண் கொண்ட கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கபிலன் படுகாயம் அடைந்தார். உடனே அப்பகுதி மக்கள் அவரை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்க கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து தேவாலா போலீசார் விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.