< Back
மாநில செய்திகள்
பள்ளி மாணவன் கிணற்றில் தவறி விழுந்து பலி
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

பள்ளி மாணவன் கிணற்றில் தவறி விழுந்து பலி

தினத்தந்தி
|
13 Jun 2023 11:40 PM IST

கலவை அருகே பள்ளி மாணவன் கிணற்றில் தவறி விழுந்து பலியானான்.

கலவையை அடுத்த வேம்பி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 37). இவரது மனைவி சோனியா கூலி வேலை செய்து வருகின்றார். இவருக்கு மணிமாறன் (11), சாரதி (8) ஆகிய இரண்டு மகன்கள் உண்டு. மணிமாறன் 6-ம் படித்து வந்தான். நேற்று மதியம் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்து, உறவினர் மகன் திருமலையுடன் அருகே உள்ள கிணற்றில் நீச்சல் பழக சென்றுள்ளான். அப்போது மணிமாறன் கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.

உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர் கிணறறில் குதித்து தேடி உள்ளனர். மேலும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் விரைந்து வந்து 4 மணி நேரம் தேடி மணிமாறனை பிணமாக மீட்னர். இது குறித்து கலவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணமுர்த்தி வழக்கு பதிவு செய்து, உடலை பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் செய்திகள்