< Back
மாநில செய்திகள்
டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவர் பலி
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவர் பலி

தினத்தந்தி
|
17 Oct 2023 11:52 PM IST

செய்யாறு அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவர் பலியானார்.

செய்யாறு

செய்யாறு அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவர் பலியானார்.

செய்யாறு தாலுகா இருங்கள் கிராமத்தைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவரின் மகன் மோகன் தாஸ் (வயது 12) அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் கடந்த 5-ந் தேதி உடல் நலக்குறைவால் செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.

காய்ச்சல் அதிகமாக இருந்ததால் மாணவனை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவ பரிசோதனையின்போது டெங்கு காய்ச்சல் உறுதியானது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மோகன்தாஸ் இறந்து விட்டான். தொடர்ந்து மோகன்தாஸ் படித்து வந்த செங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரத் துறையினர் முகாமிட்டு கிருமி நாசினி தெளித்து தீவிர சுகாதார பணி நடந்தது.

மேலும் செய்திகள்